ஈரானில் கொரோனா வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்வு

ஈரானில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2020-02-25 23:18 GMT

* ஆப்கானிஸ்தானில் அமலில் இருக்கும் தற்காலிக சண்டை நிறுத்தத்துக்கு மத்தியில் ஹெல்மண்ட் மாகாணம் நாட் இ அலி மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சாலையோரம் புதைத்து வைத்திருந்த குண்டு வெடித்ததில் 3 பேர் பலியாகினர். இதனிடையே பால்க் மாகாணத்தில் ராணுவத்தினர் நடத்திய வான்தாக்குதலில் 5 தலீபான் பயங்கரவாதிகள் பலியாகினர்.

* தென்அமெரிக்க நாடான பெருவில் தெற்கு பிராந்தியமான அரேகிப்பாவில் உள்ள நெடுஞ்சாலையில் 2 பஸ்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 11 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் 40 பேர் படுகாயம் அடைந்தனர்.

* அமெரிக்காவில் நடக்க இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் தலையிட முயற்சிப்பதாக ரஷியா மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதற்கு அமெரிக்காவில் உள்ள ரஷிய தூதரகம் பெரும் கவலை தெரிவித்துள்ளது.

* ஈரானில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவகிறது. அங்கு இந்த நோயால் நேற்று முன்தினம் ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் அங்கு கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

* சீனாவில் பிறந்து சுவீடனில் குடியுரிமை பெற்ற எழுத்தாளர் குவின் மின்ஹைய் என்பவர் இருநாடுகளுக்கு இடையேயான அரசாங்கம் சம்பந்தப்பட்ட உளவு ரகசியங்களை வெளியிட்டதாக சீனாவில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சீன கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

மேலும் செய்திகள்