இந்தோனேசியாவின் தனிம்பர் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் தனிம்பர் தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

Update: 2020-02-26 11:21 GMT
Google MAP
ஜகர்தா

இந்தோனேசியாவின் தனிம்பர் தீவில் உருவாகிய நிலநடுக்கம் ஆஸ்திரேலியாவிலும் உணரப்பட்டது.  ரிக்டர் அளவு கோளில்  6.2 ஆக பதிவாகிய இந்த  நில நடுக்கம் ஆஸ்திரேலியாவின் வடக்கு பகுதி முழுவதும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. உள்ளூர் நேரப்படி 4.30 மணியளவில் இந்த பூகம்பம் ஏற்பட்டது.

ஆஸ்திரேலியாவின் டார்வின் பகுதிக்கு 550 கிலோமீட்டர் தொலைவிலுள்ள இந்தோனேசியாவின் தனிம்பர் தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டது, ஆஸ்திரேலியாவுக்கு சுனாமி அபாயம் இல்லை என ஆஸ்திரேலிய வானிலை ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்