பிலிப்பைன்ஸ் நாட்டில் நடந்த மோதல் ஒன்றில் ராணுவ வீரர் ஒருவரும், 2 பயங்கரவாதிகளும் கொலை

பிலிப்பைன்ஸ் நாட்டில் நடந்த மோதல் ஒன்றில் ராணுவ வீரர் ஒருவரும், 2 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

Update: 2020-03-03 21:44 GMT

* சிரியாவின் இத்லிப் மாகாணத்தில் அதிபர் ஆதரவு படையின் போர் விமானத்தை துருக்கி போர் விமானம் ஒன்று வீழ்த்தி உள்ளது. இந்த தகவலை சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்தது.

* ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறிவிட்டது. இந்த நிலையில் இங்கிலாந்துக்கும், ஐரோப்பிய கூட்டமைப்புக்கும் இடையே புதிய உறவு அமைப்பு ஒன்றை ஏற்படுத்துவதற்கான பேச்சு வார்த்தை பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ் நகரில் தொடங்கி உள்ளது. ஐரோப்பிய கூட்டமைப்பு சார்பில் மைக்கேல் பார்னியரும், இங்கிலாந்து தரப்பில் டேவிட் பிராஸ்ட்டும் கலந்து கொண்டுள்ளனர்.

* ஐ.நா.சபைக்கான லிபியா நாட்டின் தூதர் காசன் சலாமி ராஜினாமா செய்துள்ளார்.

* ஒசாமா பின்லேடனின் இருப்பிடம் குறித்து அமெரிக்காவுக்கு தகவல் தெரிவித்த டாக்டர் ஷகீல் அப்ரிடி, பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின்கீழ் தண்டிக்கப்பட்டு பாகிஸ்தான் பஞ்சாப் மாகாண சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கும், அவரது குடும்பத்துக்கும் அநீதி இழைக்கப்படுவதாக கூறி, சிறையில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

* பிலிப்பைன்ஸ் நாட்டில் நடந்த மோதல் ஒன்றில் ராணுவ வீரர் ஒருவரும், 2 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

மேலும் செய்திகள்