கொரோனா அச்சம்: இலங்கையில் 3 நாட்களுக்கு பொது விடுமுறை

கொரோனா தாக்கம் காரணமாக இலங்கையில் 3 நாட்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2020-03-17 09:39 GMT
கொழும்பு,

சீனாவில் உருவாகி பலத்த உயிர்ச்சேதத்தை ஏற்படுத்திய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகளையே அச்சுறுத்திக்கொண்டு இருக்கிறது. உலக அளவில், 1,58,000-க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். பலியானோர் எண்ணிக்கை 6,500-ஐ தாண்டியது. அமெரிக்காவில் மட்டும் 50-க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். 

இந்தநிலையில் கொரோனா தாக்கம் காரணமாக, இலங்கையில் மூன்று நாட்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் வரும் வியாழக்கிழமை வரை அரசு மற்றும் தனியார் துறையினருக்கு விடுமுறை அறிவித்துள்ள அந்நாட்டு அரசு, அத்தியாவசிய சேவைகளான சுகாதாரம், வங்கி, போக்குவரத்து உள்ளிட்டவை மட்டும் செயல்படும் என அறிவித்துள்ளது. இதனிடையே, கொழும்புவில், அனைத்து கல்லூரி, பல்கலைக்கழகங்கள், முக்கிய அலுவலகங்கள் மூடப்பட்டிருப்பதால் நகரமே வெறிச்சோடி காணப்படுகிறது.

மேலும் செய்திகள்