ஸ்பெயினில் கொரோனா வைரஸ் பாதிப்பு; பலியானவர்களின் எண்ணிக்கை 558 ஆக உயர்வு

ஸ்பெயின் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 558 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2020-03-19 08:20 GMT
மாட்ரிட்,

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது. சீனாவில் இருந்து பரவ தொடங்கிய இந்த கொடிய வைரஸ் உலகம் முழுவதும் உயிர்பலி வாங்கி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் கண்டறியப்பட்டு உள்ளனர். சீனா, தென்கொரியா, ஈரான், இத்தாலி உள்ளிட்ட நாடுகளிலும் கொரோனா வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. 

இத்தாலியை தொடர்ந்து கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடாக ஸ்பெயின் உருவெடுத்துள்ளது. ஸ்பெயின் நாட்டில் வைரஸ் பரவுவதை தடுக்க அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இருந்த போதிலும், வைரஸ் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது.

இந்த நிலையில் ஸ்பெயின் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 558 ஆக உயர்ந்துள்ளது. மேலும் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13,700 ஆக உயர்ந்துள்ளது என்று அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்