உலகளவில் கொரோனா பாதிப்பு 7 லட்சத்தை தாண்டியது

உலகளவில் கொரோனா பாதிப்பு 7 லட்சத்தை தாண்டியுள்ளது.

Update: 2020-03-30 01:15 GMT
ஜெனீவா,

சீனாவின் உகான் நகரை பிறப்பிடமாக கொண்ட கொரோனா வைரஸ், தற்போது உலகம் முழுவதும் கோர தாண்டவம் ஆடி வருகிறது. 
இதில், அமெரிக்கா,  இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 

அமெரிககாவில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது.   உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 721,412 ஆக உள்ளது.  தற்போதைய நிலவரப்படி 33,956 பேர் உயிரிழந்துள்ளனர். 151,004 பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

மேலும் செய்திகள்