சீனாவில் நேற்று புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று இல்லை!

சீனாவில் நேற்று புதிதாக யாருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என்று செய்திகள் வெளியாகின.

Update: 2020-04-01 02:58 GMT
பெய்ஜிங்,

இன்று உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், முதன் முதலில் சீனாவின் உகான் நகரில் தான் கண்டறியப்பட்டது. கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் வெளிப்பட்ட இந்த வைரசைக் கட்டுப்படுத்த முதலில் திணறிய சீனா, பிறகு சுதாரித்துக்கொண்டு உகான் நகர் அமைந்துள்ள ஹூபெய் மாகாணத்தை முடக்கியது. வைரஸ் பாதிப்பில் இருந்து மீள, சீன அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது.  சீனாவின் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளால், அந்நாட்டில் கொரோனா வைரசின் தாக்கம் பெருமளவு குறையத்தொடங்கியது.

 கடந்த சில தினங்களாக சீனாவில்  புதிதாக கொரோனா தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை இரட்டை இலக்க எண்களிலேயே இருந்தது. அதுவும் புதிதாக உள்ளூரில் யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை. வெளிநாட்டிலிருந்து வந்தவர்களே புதிதாக தொற்றுக்கு ஆளானவர்கள் என்று சீனா தெரிவித்தது.  இந்த நிலையில், சீனாவில் நேற்று புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை. அதேபோல், உயிரிழப்புகளும் நேற்று ஏற்படவில்லை. 

தபோதைய நிலவரப்படி சீனாவில் 81 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  அவர்களில் 76,052 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டனர்.  3,305 பேர் கொரோனா வைரஸ் தாக்குதலுக்குப் பலியாகினர். 

மேலும் செய்திகள்