உலகளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 11 லட்சத்தை தாண்டியது

உலகளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 11 லட்சத்தை தாண்டியுள்ளது.

Update: 2020-04-04 05:54 GMT
ஜெனீவா, 

சீனாவில் உருவாகி மற்ற நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைக்கிறது. கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்காததால், அது மக்களுக்கு பரவுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒவ்வொரு நாடும் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. இந்தியாவிலும் 21 நாள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

என்னதான் நடவடிக்கை எடுத்தாலும் நோய்க்கிருமி பரவுவதை முழுமையாக கட்டுப்படுத்த முடியாததால் செய்வது அறியாமல் உலக நாடுகள் திகைத்து நிற்கின்றன. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலக அளவில் இன்று  11 லட்சத்தை தாண்டியது. இதேபோல் பலியானவர்களின் எண்ணிக்கை 59 ஆயிரத்தை கடந்தது . உலக அளவில் அதிகபட்சமாக அமெரிக்காவில் 277,475- பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.  அமெரிக்காவில் மட்டும் பலி எண்ணிக்கை 7 ஆயிரத்தை கடந்துள்ளது.  

மேலும் செய்திகள்