அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு: பலியானோர் எண்ணிக்கை 54265 ஆக உயர்வு

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் காரணமாக, பலியானோர் எண்ணிக்கை 54265 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2020-04-26 14:04 GMT
வாஷிங்டன்,

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பிடியில் சிக்கித்தவிப்போர் எண்ணிக்கை 9 லட்சத்தை கடந்து வேகமாக சென்று கொண்டிருக்கிறது. இந்த எண்ணிக்கையானது, ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, துருக்கி ஆகிய 6 நாடுகளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையை விட அதிகம்.

அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 54 ஆயிரத்தை கடந்து விட்டது. உலகள அளவிலான பலி 2 லட்சத்தை கடந்துள்ளது.

அமெரிக்காவில் உலகின் நிதித்தலைநகரம் என்ற சிறப்புக்குரிய நியூயார்க் நகரம் மற்றும் நியூஜெர்சி மாகாணங்கள் கொரோனாவால் அதிகம் பாதிப்புகளைச் சந்தித்து வருகின்றன. அமெரிக்காவில் ஏற்பட்ட மொத்த உயிரிழப்பில் 21,908 பேர் நியூயார்க் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள்.

இந்நிலையில் அமெரிக்காவில் ஒரேநாளில் 2065 பேர் பலியாகி உள்ளனர். இதனால் அங்கு பலி எண்ணிக்கை 54,265 ஆக உயர்ந்துள்ளது. அங்கு புதியதாக 35,419 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9 லட்சத்து 60 ஆயிரத்து 896 ஆக அதிகரித்துள்ளது. அங்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,18,162 ஆக அதிகரித்துள்ளது.


மேலும் செய்திகள்