சிரியாவில் இஸ்ரேல் வான்தாக்குதலில் 7 பேர் பலி

சிரியாவில் இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் 7 பேர் பலியாகினர்.

Update: 2020-04-28 23:31 GMT
டமாஸ்கஸ், 

சிரியாவில் ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாத குழுக்கள் இருப்பதாக கூறி அந்த நாட்டின் மீது இஸ்ரேல் தொடர்ந்து, வான்தாக்குதல் நடத்தி வருகிறது. ஆனால் இதனை திட்டவட்டமாக மறுக்கும் சிரியா தங்களின் ராணுவ நிலைகளை குறிவைத்தே இஸ்ரேல் வான்தாக்குதல்களை நடத்துவதாக கூறுகிறது. இந்த விவகாரத்தில் சிரியாவுக்கும், இஸ்ரேலுக்கும் இடையே மோதல் நீடிக்கிறது. 

சிரியா எல்லைக்குள் நுழைந்து வான்தாக்குதல் நடத்தும் இஸ்ரேல் போர் விமானங்களை சிரியா வான்பாதுகாப்பு படை ஏவுகணைகள் மூலம் தாக்கி அழிக்கிறது. இந்த நிலையில் சிரியா தலைநகர் டமாஸ்கஸ் அருகே நேற்று முன்தினம் காலை இஸ்ரேல் போர் விமானங்கள் வான்தாக்குதல் நடத்தின. இதில் ஈரான் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் 4 பேர் கொல்லப்பட்டனர். அப்பாவி மக்கள் 3 பேரும் பலியாகினர்.

மேலும் ஒரு பச்சிளம் குழந்தை உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தகவலை இங்கிலாந்தை தலைமையிடமாக கொண்டு இயங்கும் சிரியா மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்