இந்தோனேசியாவில் பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களுக்கு நூதன தண்டனை

இந்தோனேசியாவில் பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காதவர்களுக்கு நூதன தண்டனை வழங்கப்படுகிறது.

Update: 2020-05-13 23:15 GMT
ஜகார்த்தா, 

இந்தோனேசியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15 ஆயிரத்தை கடந்துள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தியுள்ள இந்தோனேசிய அரசு, மக்களுக்கும் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அந்த வகையில் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரும்போது முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதே போல் மக்கள் பொது இடங்களில் கூடும்போது கட்டாயமாக சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகளை மீறும் நபர்களுக்கு அபராதம் உள்ளிட்ட தண்டனைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் முக கவசம் அணியாமல் வெளியே வரும் நபர்களிடம் 17 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.1,300) அபராதம் வசூலிக்கப்படுகிறது.

இந்த நிலையில் பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க தவறும் நபர்களுக்கு இந்தோனேசிய அரசு நூதன தண்டனையை வழங்கி வருகிறது. அதன்படி சமூக இடைவெளியை அலட்சியப்படுத்தும் நபர்கள் பொது கழிவறைகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். விதிகளை மீறியவர்கள் என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட மேல் சட்டையை அணிந்து, அவர்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

மேலும் செய்திகள்