சூடானில் ஆயுத கடத்தல் தொடர்புடைய மோதலில் 25 பேர் பலி

சூடான் நாட்டின் தெற்கு பகுதியில் ஏற்பட்ட ஆயுத கடத்தல் தொடர்புடைய மோதலில் 25 பேர் கொல்லப்பட்டனர்.

Update: 2020-05-14 01:28 GMT
கார்டோம்,

சூடான் நாட்டில் அதிக அளவில் பல குழுக்களை கொண்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்.  இவர்களுக்கு இடையே பல தசாப்தங்களாக மோதல் நடந்து வருகிறது.  இதனால் அந்நாட்டில் நிலையற்ற தன்மை நிலவி வருகிறது.

கடந்த வாரம் தெற்கு தார்பூர் பகுதியில் கால்நடைகள் திருட்டு போன சம்பவத்தில் பழங்குடியினர் இடையே மோதல்கள் ஏற்பட்டன.  இதில் 30 பேர் வரை பலியாகினர்.

இந்த நிலையில், தெற்கு கோர்டோபன் பகுதியில் கடுகிலி நகரம் மற்றும் அருகிலுள்ள கிராமங்களில் ஆயுத கடத்தல் தொடர்புடைய புதிய மோதல்கள் நடந்தன.  இந்த மோதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.  19 பேர் காயமடைந்தனர்.

இதுபற்றிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.  இந்த மோதல்கள் பழங்குடியினருக்கு இடையே நடைபெறவில்லை என்று கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்