வட கொரியா கொரோனா பாதிப்பிலிருந்து முற்றிலும் பாதுகாப்பாக உள்ளது -வீடியோ வெளியீடு

வட கொரியா கொரோனா பாதிப்பிலிருந்து முற்றிலும் பாதுகாப்பாக உள்ளதாக வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது.

Update: 2020-05-15 12:57 GMT
சியோல் 

வடகொரியாவின் வடபகுதியில் அமைந்துள்ள முக்கிய நகரில் ரகசியமாக ஊரடங்கை பிறப்பித்துள்ளார் கிம் ஜாங் உன்.

வெளியான குறித்த தகவலானது, வடகொரியாவில் கொரோனா தாக்கம் இருப்பதை உறுதி செய்துள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

வடபகுதியில் அமைந்துள்ள ராசன் நகரம் மொத்தமாக முடக்கப்பட்டுள்ள நிலையில், அந்த நகரில் கொரோனா பாதிப்பு அதிகரித்திருக்கலாம் அல்லது,கிம் ஜாங் உன் ராசன் நகரில் இருந்து தமது இரண்டாவது பொது நிகழ்ச்சிகளை முன்னெடுக்க திட்டமிட்டிருக்கலாம் என அருகாமையில் அமைந்துள்ள நகர மக்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.

இந்த மாத துவக்கத்தில் இருந்தே, ராசன் நகருக்கு வெளியாட்களை செல்ல அனுமதிப்பதில்லை எனவும்,

ராசன் நகர மக்கள் வெளியே செல்லவும் அதிக கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாக, அந்த பிராந்திய மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

ரயில் பயணிகள் மட்டுமல்ல, சாலை மார்க்கம் பயணிப்பவர்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளே நுழைவதைத் தடுத்து வருகின்றனர்.

நகரத்தை திடீரென்று முடக்கியுள்ளது கொரோனா வைரஸ் தொடர்பானதாக இருக்கலாம் என்று குடியிருப்பாளர்கள் பலரும் சந்தேகிக்கின்றனர்,

இருப்பினும் நகருக்குள் நுழைவதற்கு தடை விதிக்க எந்த காரணத்தையும் அரசாங்கம் இதுவரை வெளியிடவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

சீனாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் கூட Rason நகருக்கு இதுபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதில்லை என கூறப்படுகிறது. நகருக்குள் நுழைவதை அவர்கள் திடீரென தடுப்பதற்கான காரணம் எங்களுக்குத் தெரியாது என பெரும்பாலான மக்கள் தெரிவித்துள்ளனர்.

வட கொரியா கொரோனா பாதிப்பிலிருந்து தாங்கள் முற்றிலும் பாதுகாப்பாக இருக்கிறோம் என கூறி வருகிறது

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த முடியாமல் வடகொரியா தவித்து வருவதாக கூறப்படுவதற்கு பதிலடி அளிக்கும் வகையில் , தலைநகர் பியாங்யாங்கில் மக்கள் வெளியிடங்களில் நடமாடுவது போன்ற காட்சிகளை அந்நாட்டின் அரசு ஊடகம் வெளியிட்டுள்ளது.

கடந்த மே 13-ஆம் தேதி குறிப்பிடப்பட்டுள்ள மூன்று நிமிடம் நீளமுள்ள இரண்டு வீடியோகள், வடகொரிய அரசு ஊடகமான டிபி ஆர்கே (DPRK)இணையதளத்தில் பகிரப்பட்டிருந்தன.

இந்த வீடியோவில்  மக்கள் பலசரக்கு கடைகள், பூங்காக்கள் ஆகியவற்றுக்கு செல்வது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தன. ஆனால் மக்கள் அனைவரும் முகமூடிகள் அணிந்திருந்ததை பார்க்க முடிந்தது.

ஆனால் கொரோனா தொற்றை பற்றி நேரடியாக குறிப்பிடாமல், கடைகளில் போதுமான உணவுப் பொருட்கள் கையிருப்பு இருப்பதாக கடை ஊழியர் ஒருவர் கூறுவது போலவும், வாரத்திற்கு மூன்று முறை பொருட்கள் வாங்க கடைக்கு வருவதாக வாடிக்கையாளர் ஒருவர் கூறுவது போலவும் அந்த காணொளிகளில் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

தற்போது வரை தங்கள் நாட்டில் கொரோனா தொற்று இல்லை என வடகொரியா கூறி வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் வெளிவந்த சில செய்திகளில், கொரோனா வைரஸை சமாளிக்க முடியாமல் வடகொரியா திணறி வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்