ஜப்பானில் மியாகி பிராந்தியத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானில் மியாகி பிராந்தியத்தில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

Update: 2020-05-18 21:15 GMT

* கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வெளிநாடுகளில் தங்கியிருந்த நியூசிலாந்து மக்கள் நாடு திரும்பியதால் கடந்த மார்ச் மாத இறுதியில் அந்த நாட்டு மக்கள் தொகை 50 லட்சத்தை எட்டியதாக புள்ளி விவர தகவல்கள் தெரிவிக்கின்றன.

* ஆப்கானிஸ்தானின் கந்தாஹர் மாகாணத்தில் தலீபான் பயங்கரவாதிகளை குறிவைத்து ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

* இஸ்ரேலுக்கான சீன தூதர் டு வெய், மர்மமான முறையில் இறந்தது குறித்து விசாரணை நடத்துவதற்காக சீன அதிகாரிகள் இஸ்ரேல் விரைந்துள்ளனர்.

* இந்தியாவில் 1993-ம் ஆண்டு நடந்த ரெயில் குண்டுவெடிப்பு வழக்கில் இங்கிலாந்தில் கைது செய்யப்பட்ட தாவூத் இப்ராஹிம் கூட்டாளியான டைகர் ஹனீப்பை நாடு கடத்த கோரும் இந்தியாவின் கோரிக்கையை இங்கிலாந்து அரசு நிராகரித்து விட்டது.

* ஜப்பானில் மியாகி பிராந்தியத்தில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.2 புள்ளிகளாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து தகவல்கள் இல்லை. இதே போல் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்திலும் ரிக்டர் அளவுகோலில் 5.5 புள்ளிகாக பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

மேலும் செய்திகள்