கொரோனா பாதிப்பு: ரஷ்யாவை முந்தி சென்ற பிரேசில்

பிரேசிலில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கடந்த 24 மணிநேரத்தில் 5,346 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டின் சுகாதாரதுறை தெரிவித்துள்ளது.

Update: 2020-05-24 18:46 GMT
பிரேசிலியா,

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் உகான் நகரில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகளை உலுக்கி வருகிறது.

உலக அளவில், நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது.  அதிகமாக பாதிப்புகளுடன் அமெரிக்கா முன்னிலையில் உள்ளது. சில நாட்களுக்கு முன் அடுத்ததாக அதிக பாதிப்புகளுடன் ரஷ்யா 2 வது இடத்திலும், பிரேசில் அடுத்த இடத்திலும் இருந்தது.  ஆனால் தற்போது பிரேசிலில் உச்சகட்டமாக கொரோனா கோர தாண்டவம் ஆடி ஆயிரக்கணக்கானவர்களை தாக்கி வருகிறது.
 
இந்த நிலையில், பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 52,744 உயர்ந்துள்ளது.    கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,346 பேர். பலி எண்ணிக்கை 22,291. கொரோனாவால் இருந்து மீண்டவர்கள் 1, 42,587 பேர் ஆகும்.  பிரேசில், ரஷ்யாவை தற்போது முந்தி சென்றது

மேலும் செய்திகள்