தென் கொரியாவில் மீண்டும் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் தொற்று

தென் கொரியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று பரவத்தொடங்கி உள்ளது.

Update: 2020-05-30 22:30 GMT

* கொரோனா வைரஸ் பிரச்சினைக்கு மத்தியிலும், ஜூன் மாத இறுதியில் அமெரிக்காவில் நடக்க உள்ள ஜி-7 தலைவர்களின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் விடுத்த அழைப்பை ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கல் நிராகரித்து விட்டார்.

* பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் சிறப்பு உதவியாளர் நியமனம் குறித்த வழக்கு அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி காஜி பாஸ் ஈசா, அவரது நற்சான்றுகள் மற்றும் நியமனம் குறித்து கேள்வி எழுப்பினார்.

* தென் கொரியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் தொற்று பரவத்தொடங்கி உள்ளது. இதனால் தலைநகர் சியோல் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் அரசு அருங்காட்சியகங்கள், திரையரங்குகள் 2 வார காலங்களுக்கு மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

* ஆப்கானிஸ்தானில் ரம்ஜான் பண்டிகையையொட்டி அறிவிக்கப்பட்ட சண்டை நிறுத்தம், தலீபான்கள் தாக்குதலுக்கு மத்தியிலும், காலாவதியாகிற நிலையிலும் தொடரும் என அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். எதிர்கால தாக்குதல்களை தடுக்க அதிக ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பு தேவை எனவும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செய்தி தொடர்பாளர் ஜாவித் பைசல் தெரிவித்தார்.

* ஈராக் நாட்டின் வட பகுதியில் கிர்குக் நகரில் 2 ஐ.எஸ். பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்த கூடுதல் தகவல்கள் வெளியிடப்படவில்லை.

* ஈரானில் அந்த நாட்டின் கடற்படைக்கு உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டு கட்டமைக்கப்பட்ட 112 ஏவுகணை வேக படகுகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்