இலங்கையில் மேலும் கட்டுப்பாடுகள் தளர்வு

இலங்கையில் மேலும் கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டுள்ளன.

Update: 2020-06-13 22:15 GMT
கொழும்பு,

இலங்கையில் முதல் நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து கடந்த மார்ச் 20-ந்தேதி முதல் அங்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. முதலில் நாடு முழுவதுமாக அமல்படுத்தப்பட்ட இந்த ஊரடங்கு பின்னர் நாட்டின் 3-ல் 2 பங்கு பகுதிகளுக்காக குறைக்கப்பட்டது.

தொடர்ந்து கடந்த மாதம் அங்கு அலுவலகங்கள், வர்த்தக பணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இந்த மாத தொடக்கத்தில் பொது போக்குவரத்துக்கும் அனுமதி அளிக்கப்பட்டது. தற்போது அங்கு இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த கட்டுப்பாட்டிலும் தற்போது தளர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் அங்கு நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரை மட்டுமே ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்து உள்ளார்.

அங்கு மத வழிபாட்டு தலங்களை திறக்க ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரியல் பூங்காக்கள் நாளை முதல் திறக்கப்படுகின்றன. இலங்கையில் கொரோனா தொற்றால் 1,880 பேர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், 11 உயிரிழப்புகளும் நிகழ்ந்துள்ளன.

மேலும் செய்திகள்