ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் 13 பேர் பலி; ராணுவ வீரர்கள் அதிரடி

ஆப்கானிஸ்தானில் ராணுவ வீரர்கள் நடத்திய அதிரடி தாக்குதலில் 13 தலீபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

Update: 2020-06-29 00:23 GMT
காபூல்,

ஆப்கானிஸ்தானில் 19 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. தலீபான் பயங்கரவாதிகளுக்கும் அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே மோதல் தற்போது தீவிரமடைந்துள்ளது. ராணுவ வீரர்கள் மற்றும் போலீசாரை குறிவைத்து பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். ராணுவ வீரர்கள் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்தனர்.

அந்த நாட்டின் கிழக்கு மாகாணம் பாக்டியாவில் உள்ள தாண்ட்பதன் மற்றும் சயீத் மாவட்டங்களில் ராணுவ வீரர்களை குறிவைத்து தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதனைத் தொடர்ந்து ராணுவ வீரர்கள் தங்களது துப்பாக்கிகளால் பயங்கரவாதிகள் தக்க பதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்கும் இடையே கடுமையான துப்பாக்கி சண்டை நடந்தது.

பல மணி நேரம் நீடித்த இந்த சண்டையின் இறுதியில் பயங்கரவாதிகள் 13 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 5 பயங்கரவாதிகள் படுகாயமடைந்தனர். இந்த தகவலை பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. அதேசமயம் பயங்கரவாதிகளின் தாக்குதல்களில் ராணுவ வீரர்கள் தரப்பில் இழப்பு ஏற்பட்டதா என்பது குறித்து தகவல்கள் இல்லை.

மேலும் செய்திகள்