59 சீன மொபைல் செயலிகளுக்கு தடை அமெரிக்கா ஆதரவு

59 சீன செயலிகளுக்கு தடை அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது

Update: 2020-07-02 01:36 GMT
வாஷிங்டன்

நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சீன நிறுவனங்களை சேர்ந்த டிக்டாக், ஷேர்இட், வீ சேட் உள்ளிட்ட 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது.மத்திய அரசு தடை எதிரொலியாக செல்போன்களில் ஏற்கனவே பதிவிறக்கம் செய்யப்பட்ட டிக் டாக் உள்ளிட்ட செயலிகள் முடக்கப்பட்டுள்ளன.

சீன செயலிகளை மத்திய அரசு தடை செய்திருப்பது தொடர்பாக இந்தியாவுக்கான சீன தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் மத்திய அரசின் நடவடிக்கை இந்தியாவின் சந்தை போட்டிக்கும், நுகர்வோர் நலனுக்கும் உகந்ததல்ல என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் மீதான இந்தியாவின் நடவடிக்கைக்கு அமெரிக்க வெளியுறவு செயலாளர் மைக் பாம்பியோ ஆதரவளித்துள்ளார்.  அவர் கூறி இருப்பதாவது:-

சீனாவிலிருந்து "சில மொபைல் பயன்பாடுகளுக்கு இந்தியாவின் தடையை நாங்கள் வரவேற்கிறோம், இந்த நடவடிக்கை "இந்தியாவின் ஒருமைப்பாட்டையும் தேசிய பாதுகாப்பையும் அதிகரிக்கும்" என கூறினார்

அமெரிக்காவும் இந்தியாவின் பாதையை பின்பற்றி சில சீன நிறுவனங்களுக்கு எதிராக முக்கிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

மேலும் செய்திகள்