அமெரிக்க அதிபர் டிரம்பின் மூத்த மகனின் காதலிக்கு கொரோனா பாதிப்பு

அமெரிக்க அதிபர் டிரம்பின் மூத்த மகன் ஜூனியர் டிரம்பின் காதலிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

Update: 2020-07-04 16:24 GMT
வாஷிங்டன்,

அமெரிக்காவில் கொரோனா பாதிப்புக்கு 1.3 லட்சம் பேர் பலியாகி உள்ளனர்.  தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்து வருகிறது.  அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மூத்த மகன் டொனால்டு டிரம்ப் ஜூனியர் (வயது 42).  இவரது காதலி கிம்பர்லி கில்பாயல் (வயது 51).  அமெரிக்க அதிபர் டிரம்பின் சொற்பொழிவை கேட்பதற்காக தெற்கு டகோடா நகருக்கு கிம்பர்லி சென்றுள்ளார்.

அதிபர் டிரம்புடன் நெருங்கிய தொடர்பில் இருக்க கூடும் என்ற அடிப்படையில், முக்கிய நபர்களுக்கு வழக்கம்போல் நடத்தப்படும் கொரோனா பரிசோதனை கிம்பர்லிக்கும் நடத்தப்பட்டது.  இதில், அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது.

இதனை தொடர்ந்து உடனடியாக அவர் தனிமைப்படுத்தப்பட்டார்.  அவருக்கு அறிகுறிகள் எதுவும் தென்படாத நிலையில், பரிசோதனை முடிவு சரியா? என உறுதிப்படுத்தி கொள்வதற்காக மீண்டுமொரு முறை அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படும்.

மேலும் செய்திகள்