சீனாவில் ஏரியில் மூழ்கிய பேருந்து; கல்லூரி மாணவர்கள் உள்பட 21 பேர் பலி

சீனாவில் பேருந்து ஒன்று ஏரியில் மூழ்கியதில் கல்லூரி மாணவர்கள் உள்பட 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

Update: 2020-07-07 12:34 GMT
பெய்ஜிங்,

சீனாவின் தென்மேற்கே கைசவ் மாகாணத்தில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.  அதில், வருடாந்திர கல்லூரி நுழைவு தேர்வில் பங்கேற்பதற்காக கல்லூரி மாணவர்களும் சென்றுள்ளனர்.

இந்நிலையில், சாலை விபத்தில் சிக்கிய அந்த பேருந்து ஹாங்ஷான் என்ற ஏரியில் பாய்ந்தது.  இதில் கல்லூரி மாணவர்கள் உள்பட 21 பேர் உயிரிழந்தனர்.  காயமடைந்த 15 பேர் மீட்கப்பட்டு உள்ளனர்.  அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு உள்ளனர்.

சீனாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் பருவமழையால் பல நகரங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.  இதனால், கடந்த வெள்ளி கிழமை வரை சீனா முழுவதும் 119 பேர் பலியாகியோ அல்லது காணாமலோ போயுள்ளனர் என கூறப்படுகிறது.  இந்நிலையில், ஏரியில் பேருந்து மூழ்கியுள்ள சம்பவம் நடந்துள்ளது.

மேலும் செய்திகள்