துபாயில் உள்ள பெரும்பாலான அரசு, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தொற்று இல்லை

துபாயில் கடந்த 4 மாதங்களாக கொரோனா தடுப்பு பணிகள் மிகவும் தீவிரப்படுத்தப்பட்டது.

Update: 2020-07-12 02:19 GMT
அபுதாபி,

துபாய் சுகாதார ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

துபாயில் கடந்த 4 மாதங்களாக கொரோனா தடுப்பு பணிகள் மிகவும் தீவிரப்படுத்தப்பட்டது. பல்வேறு இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு கொரோனா தொற்று அறிகுறிகள் உடையவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். மேலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள சிறப்பு பிரிவுகளில் சேர்க்கப்பட்டனர்.

இதற்காக துபாய் உலக வர்த்தக மையத்தில் சிறப்பு மருத்துவ வளாகம் அமைக்கப்பட்டது. உலக சுகாதார நிறுவனம் வழிகாட்டுதலில் தரமான சிகிச்சை மற்றும் கண்காணிப்பால் பெரும்பாலான அரசு, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகள் அனைவரும் குணமடைந்து விடைபெற்று சென்றனர். தற்போது அரசு மற்றும் தனியார் என மொத்தம் 18 மருத்துவமனைகளில் இருந்து அனைத்து கொரோனா நோயாளிகளும் பூரணமாக குணமடைந்து சென்று விட்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்