பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28 லட்சத்தை தாண்டியது

பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 28 லட்சத்தை தாண்டியுள்ளது.

Update: 2020-08-05 16:29 GMT
பிரேசிலியா, 

சீனாவின் ஹூபெய் மாகாணம் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது உலகின் 213 நாடுகள்/ பிரதேசங்களுக்கு பரவியுள்ள இந்த வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக, 51,603 பேருக்குக் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 28 லட்சத்து 08 ஆயிரத்து 076 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில், 1,154 பேர் கொரோனாவுக்குப் பலியாகி உள்ளனர். இதையடுத்து தற்போதுவரை 96,096 பேர் பலியாகியுள்ளனர். 

பிரேசிலில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை தற்போது 19,70,767 ஆக உள்ளது. தற்போதைய நிலவரப்படி, கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு 7 லட்சத்து 41 ஆயிரத்து 213 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

உலக அளவில் கொரோனா பாதிப்பில் அமெரிக்கா முதலிடத்திலும், பிரேசில் இரண்டாவது இடத்திலும், இந்தியா மூன்றாவது இடத்திலும் உள்ளன.

மேலும் செய்திகள்