இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றியை நோக்கி மகிந்தா ராஜபக்சேயின் கட்சி

இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை நோக்கி ராஜபக்சே கட்சி; யாழ்பாணத்தில் தமிழ்தேசியக் கூட்டணிக்கு பின்னடைவு ஏற்பட்டு உள்ளது.

Update: 2020-08-06 12:17 GMT

கொழும்பு

இலங்கை நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு முடிவடைய இருந்த சூழலில், நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு முன்கூட்டியே தேர்தலை நடத்த இருப்பதாக அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்தார். அதன்படி இலங்கை நாடாளுமன்றம் கடந்த மார்ச் மாதம் கலைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஏப்ரல் 25-ந் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 2 முறை ஒத்திவைக்கப்பட்ட இந்த தேர்தலை ஆகஸ்டு 5-ந் தேதி நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் பலத்த பாதுகாப்புடன் இலங்கையில் நேற்று பொதுத் தேர்தல் நடந்து முடிந்தது. மொத்தமுள்ள 225 உறுப்பினர்களில் 196 உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்காக இந்தத் தேர்தல் நடந்தது.

இந்த தேர்தலில் ராஜபக்சே சகோதரர்களின் பொதுஜன பெரமுன கட்சி, ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய தேசிய கட்சியில் இருந்து பிரிந்து சென்ற சஜித் பிரேமதசாவின் ஐக்கிய மக்கள் தேசிய கட்சி, மைத்ரிபாலாவின் சுதந்திர கட்சி என 4 முக்கிய கட்சிகள் களம் காண்கின்றன. 

20 அரசியல் கட்சிகள் மற்றும் 34 சுயேச்சை இயக்கங்களை சேர்ந்த 7,200 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர். நேற்று நடந்த தேர்தலில் 55 சதவீத வாக்குகள் பதிவாகின

தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு மதியம் 2.30 மணி முதல் வெளியிடப்பட்டு வருகிறது.

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி பெற்று எட்டு மாதங்களுக்குப் பிறகு, அவருடைய மூத்த சகோதரர் மகிந்த ராஜபக்சே தலைமையிலான புதிய கட்சி பொதுஜன பெரமுன கட்சி  (எஸ்.எல்.பி.பி) கோத்தயாபவின் வெற்றியை உறுதி செய்துள்ளது. 

இ இன்று நடந்து வரும் வாக்கு எண்ணிக்கையில் தபால் வாக்குகளின் முடிவில் மகிந்தா ராஜபக்ச கட்சி 73 சதவீத வாக்குகளைப் பெற்று முன்னிலையில் இருந்து வருகிறது.

தற்போது வெளியாகியுள்ள தபால் வாக்கு முடிவுகள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 27,682 வாக்குகளையும், ஐக்கிய மக்கள் சக்தி 5,144 வாக்குகளையும்,தேசிய மக்கள் சக்தி 3,135 வாக்குகளையும்,ஐக்கிய தேசியக் கட்சி 1,507 வாக்குகளையும் பெற்றுள்ளது.

மாத்தறை மாவட்டத்திற்கான தபால்மூல வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன....

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன - 20,275
தேசிய மக்கள் சக்தி - 3149
ஐக்கிய மக்கள் சக்தி - 3078
ஐக்கிய தேசியக் கட்சி - 536

மேலும் செய்திகள்