உலக அளவில் கொரோனா பரிசோதனையில் 2வது இடத்தில் இந்தியா; டொனால்டு டிரம்ப் பேட்டி

அமெரிக்காவுக்கு அடுத்து அதிக கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளும் நாடுகளில் இந்தியா 2வது இடத்தில் உள்ளது என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பேட்டியில் கூறியுள்ளார்.

Update: 2020-08-11 02:03 GMT
வாஷிங்டன்,

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்தில் உள்ளது.  இதுபற்றி ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள தகவலில், அமெரிக்காவில் 50 லட்சத்து 75 ஆயிரத்து 678 பேர் கொரோனாவால் பாதிப்படைந்து உள்ளனர் என தெரிவித்து உள்ளது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, நாங்கள் இதுவரை ஏறக்குறைய 6.5 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனைகளை நடத்தி இருக்கிறோம்.  வேறு எந்த நாடும் இந்த எண்ணிக்கையை நெருங்கவில்லை.

1.1 கோடி கொரோனா பரிசோதனைகளுடன் இந்தியா 2வது இடத்தில் இருக்க கூடும்.  அந்த நாட்டில் 150 கோடி மக்கள் வசிக்கின்றனர்.  உலகிலேயே இதுவரை பரிசோதனைகளில் முதல் இடத்தில் நாங்கள் இருக்கிறோம்.  அதிக தரமுள்ள பரிசோதனைகளையும் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம் என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்