உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.13 கோடியாக உயர்வு

உலக அளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 2.13-கோடியாக உயர்ந்துள்ளது.

Update: 2020-08-15 01:15 GMT

ஜெனீவா, 

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு  இறுதியில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளை உலுக்கி வருகிறது. 
 உலகின் 215 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த  கொடிய வைரஸ் பெரும் மனித இழப்புகளை ஏற்படுத்தி வருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை  உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன. 

முதலில் தொற்று வேகமாக பரவிய ஐரோப்பிய நாடுகளில் கொரோனா ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டாலும் அமெரிக்கா, இந்தியா, பிரேசில், ரஷ்யா போன்ற நாடுகளில்  தொற்று பரவல் வேகமாக உள்ளது.  தற்போதைய நிலவரப்படி உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 7.62 லட்சத்தைக் கடந்துள்ளது. 

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.13-கோடியைக் கடந்துள்ளது.  கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி குணமடைந்தோர் எண்ணிக்கை 1.41-கோடியைத் தாண்டியுள்ளது.  

மேலும் செய்திகள்