வடகொரியாவில் அதிரடி நடவடிக்கை: தங்கைக்கு கூடுதல் அதிகாரம் தந்தார், கிம்

வடகொரியாவில் அதிரடி நடவடிக்கையாக தங்கைக்கு கூடுதல் அதிகாரம் தந்தார், கிம்

Update: 2020-08-22 00:35 GMT
சியோல்,

வட கொரியாவில் கிம் ஜாங் அன் குடும்ப ஆட்சி நடந்து வருகிறது. அங்கு சமீப காலமாக கிம் ஜாங் அன்னின் தங்கை கிம் யோ ஜாங், செல்வாக்கு வளர்ந்து வருகிறது. அவர்தான் அமெரிக்கா மற்றும் தென்கொரியா தொடர்பான கொள்கைகளை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்து வருகிறார்.

இந்த நிலையில் அவருக்கும், வேறு சில உதவியாளர்களுக்கும் கிம் ஜாங் அன் கூடுதல் அதிகாரங்களை அதிரடியாக வழங்கி உள்ளார்.

இருப்பினும், தென்கொரியா தலைநகர் சியோலில் மூடிய அரங்கத்தில் நடந்த எம்.பி.க்கள் கூட்டத்தில், “கிம் ஜாங் அன் முழுமையாக வடகொரியாவை ஆட்சி செய்து வருகிறார். அவருக்கு எந்த ஒரு உடல்நல கோளாறும் இருப்பதற்கான அறிகுறிகள் தெரியவில்லை. அதே போன்று தனது தங்கையை வாரிசாக கொண்டு வருவதற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என உளவுதுறையினர் கூறுகின்றனர்” என தெரிவிக்கப்பட்டது.

ஆனாலும் கிம் யோ ஜாங்தான் நாட்டின் ஒட்டுமொத்த விவகாரங்களை வழிநடத்துவதாக தென்கொரியா உளவுத்துறை கூறுகிறது.

மேலும் செய்திகள்