நேபாள பகுதிகளை சீனா ஆக்கிரமித்துள்ளதாக வெளியான தகவலுக்கு அந்நாட்டு அரசு மறுப்பு

நேபாள பகுதிகளை சீனா ஆக்கிரமித்துள்ளதாக வெளியான தகவலுக்கு அந்நாட்டு அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

Update: 2020-08-23 14:05 GMT
காத்மாண்டு,

சீனா சமீப காலமாக அண்டை நாடுகளுடன் வாலாட்டி வருகிறது. இந்தியாவின் லடாக் பகுதியில் ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட சீனாவுக்கு இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து, சீனா பின் வாங்கியது.  இந்த நிலையில்,   நேபாளத்தில் ஏழு எல்லை மாவட்டங்களில் உள்ள பல இடங்களை சீனா ஆக்கிரமித்துள்ளதாக செய்திகள் வெளியாகின.  

சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கு பயந்து பிரதமர் கே.பி.சர்மா ஒளி  அமைதியாக இருக்கிறாரா என்ற வகையில் சந்தேகங்கள்  எழுப்பப்பட்டன.   

ஆனால், இந்த தகவல்களை  நேபாள அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. அதேபோல், சீன ஆக்கிரமிப்பு பற்றிய செய்திகளை வெளியிட்ட செய்தித்தாளும் தவறான செய்திகளை வெளியிட்டு விட்டதாக மன்னிப்பு கோரியுள்ளது. 

மேலும் செய்திகள்