சாப்ட்வேர் ஒன்றை மாற்றியது தொடர்பாக அமெரிக்காவில் சீன விஞ்ஞானி கைது

சீனாவிற்கு முக்கியமான சாப்ட்வேர் ஒன்றை மாற்றியது தொடர்பான எஃப்.பி.ஐ விசாரணையின் போது ஒரு சீனாவை சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

Update: 2020-08-29 03:23 GMT
வாஷிங்டன்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸின் கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளரான குவான் லீ ஜூலை மாதம் தனது குடியிருப்பின் வெளியே ஒரு குப்பை தொட்டியில் சேதமடைந்த ஹார்ட் டிரைவை எறிந்தார். இதை தொடர்ந்து அமெரிக்க எப்.பி.ஐ அதிகாரிகள் அவரை  கைது செய்தனர்.

"சீனாவின் தேசிய பாதுகாப்பு தொழில்நுட்ப பல்கலைக்கழகத்திற்கு முக்கியமான அமெரிக்க மென்பொருள் அல்லது தொழில்நுட்ப தரவை மாற்றியதற்காக குவானிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவரது விசா விண்ணப்பம்  நேர்காணல்களில் சீன இராணுவத்துடன் அவர் வைத்திருந்த தொடர்பை மறைத்து உள்ளார். குவான் நேற்று  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 

மேலும் செய்திகள்