ஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் வீச்சு

ஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது.

Update: 2020-08-31 00:14 GMT
பாக்தாத்,

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கடந்த ஜனவரி மாதம் அமெரிக்க ராணுவம் நடத்திய வான்தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். இதனால் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையே மோதல் வெடித்தது. ஈராக்கில் இருக்கும் ஈரான் ஆதரவு பிரிவினைவாதிகள் அங்குள்ள அமெரிக்க படைகளை குறிவைத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

இந்த நிலையில் தலைநகர் பாக்தாத்தில் வெளிநாட்டு தூதரகங்கள், அரசு நிறுவனங்கள் உள்ளிட்டவை அமைந்துள்ள பசுமை மண்டலத்தில் நேற்று முன்தினம் ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த ராக்கெட்டு அமெரிக்க தூதரகத்துக்கு அருகில் உள்ள காலியான வீட்டின் மீது விழுந்து வெடித்துச் சிதறியதாக ஈராக் ராணுவம் தெரிவித்துள்ளது.

அதிர்ஷ்டவசமாக இந்த தாக்குதலில் உயிர் இழப்போ அல்லது யாருக்கும் காயமோ ஏற்படவில்லை. இந்த ராக்கெட் தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

மேலும் செய்திகள்