பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 336 பேர் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழப்பு

பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 336-பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

Update: 2020-08-31 06:45 GMT
பிரேசிலா, 

உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகம் காணப்படும்  நாடுகளில் ஒன்றாக பிரேசில் விளங்குகிறது. கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ள நாடுகள் வரிசையில் பிரேசில் 2-ஆம் இடம் வகிக்கிறது.  பிரேசிலில்,  கடந்த 24 மணி நேரத்தில் 16,158 பேருக்குத் தொற்று பதிவாகியுள்ளது.  இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை   3,86,2,311 ஆக உயர்ந்துள்ளது.

பிரேசிலின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலமான சாவ் பாலோவில் 8,03,404 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 29,978 -இறப்புகள் பதிவாகியுள்ளன. அடுத்தபடியாக ரியோ டி ஜெனிரோவில் 2,23,302 -பேரும்,16,027 இறப்புகளும், சியாராவில் 214,457 பாதிப்பும், 8,384 -இறப்புகளும் பதிவாகியுள்ளன.  

கடந்த 24 மணி நேரத்தில் அந்நாட்டில் 336-பேர் கொரோனா தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதுவரை  120,828-பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். 

மேலும் செய்திகள்