உலகைச் சுற்றி...

அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள ஒரு ஓட்டலுக்கு வெளியே நின்று கொண்டிருந்தவர்களை மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார்.

Update: 2020-08-31 22:30 GMT
உலகைச் சுற்றி...

* அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள ஒரு ஓட்டலுக்கு வெளியே நின்று கொண்டிருந்தவர்களை மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார் மேலும் 4 பேர் பலத்த காயமடைந்தனர்.

* துபாயில் உள்ள ஓட்டல் ஒன்றில் கேஸ் சிலிண்டர் வெடித்து சிதறியதில் பயங்கர தீ விபத்து நேரிட்டது. இதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.

* பாகிஸ்தானின் பல்வேறு மாகாணங்களில் கனமழை நீடிக்கிறது. இதனால் பல மாகாணங்கள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. இதனிடையே அங்கு மழை வெள்ளம் தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 163 ஆக அதிகரித்துள்ளது.

* ஏமனை சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்கள் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட படகை ரிமோட் மூலம் இயக்கி செங்கடல் பகுதிக்கு அனுப்பியதாகவும், ஆனால் அந்தப் படகை சவூதி கூட்டுப்படையின் கடற்படை வீரர்கள் வெற்றிகரமாக தாக்கி அழித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

*ஆப்கானிஸ்தானின் ஹெல்மண்ட் மாகாணத்தில் உள்ள அமெரிக்க விமானப் படைத்தளம் மற்றும் ராணுவ தளம் மீது சமீபத்தில் நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதல்களுக்கு தலீபான் பயங்கரவாதிகளே காரணம் என அமெரிக்க ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.

* ஜப்பான் பிரதமர் ஷின்ஜோ அபே தனது பதவியை ராஜினாமா செய்வதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்தார். இது தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஷின்ஜோ அபேயை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது ஜப்பான் வரலாற்றில் மிகச்சிறந்த பிரதமர் ஷின்ஜோ அபே என டிரம்ப் புகழாரம் சூட்டினார்.

* பிரான்ஸ் நாட்டின் தென் மேற்குப் பிராந்தியத்தில் நேற்றுமுன்தினம் இரவு திடீரென மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மின்சார ரெயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டது. ரெயில்கள் ஆங்காங்கே பாதியில் நிறுத்தப்பட்டதால் பெண்கள் குழந்தைகள் உள்பட ஆயிரக்கணக்கான பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

மேலும் செய்திகள்