வட கொரியாவில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர கண்டதும் சுட உத்தரவு

கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர கண்டதும் சுடும் உத்த்ரவை வடகொரொய அதிபர் கிம் ஜாங் உன் பிறப்பித்து உள்ளார்.

Update: 2020-09-02 09:34 GMT
ஹொரியோங்

சீனாவுடனான வடகொரியாவின் எல்லையிலிருந்து அரை மைல் தூரத்திற்குள் தென்படும் எவரையும் கண்டதும் சுட்டுக் கொல்ல நாட்டின் ராணுவத்தினர் மற்றும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

வடகொரியாவில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவரும் பொருட்டு, கிம் ஜாங் உன் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார்.கடுமையான இந்த புதிய நடவடிக்கையானது வியாழக்கிழமை நள்ளிரவில் நடைமுறைக்கு வருவதற்கு ஒரு நாளுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனிடையே, வடகொரிய பொதுமக்கள் சீன எல்லை அருகே சென்றதற்கான காரணத்தைப் பொருட்படுத்தாமல் உரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என ஹொரியோங் நகர போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த கண்டதும் சுட உத்தரவானது சீனா உடனான வடகொரியாவின் 880 மைல் தொலைவு எல்லைப்பகுதிக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.மட்டுமின்றி எல்லைப்பகுதியில் உள்ள பொலிசார் மற்றும் ராணுவ முகாம்களுக்கு தேவையான துப்பாக்கி குண்டுகளையும் வடகொரிய அரசாங்கம் லொறிகளில் அனுப்பி வைத்துள்ளது.

மேலும், துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளும் அதிகாரிகள் மீது துறை ரீதியான எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவலை முன்னிட்டு இரு நாடுகளும் எல்லைகளை மூடி வர்த்தகத்தை நிறுத்திய போதிலும் எல்லை அருகாமையில் உள்ள மக்கள் ரகசியமாக வர்த்தகத்தை முன்னெடுத்து வந்துள்ளனர்.தற்போது கண்டதும் சுட உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், சிறப்பு படைகளும் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்