வடகொரியாவில் கிம் மகத்துவம் பற்றி அறிய தொடக்கப்பள்ளி மாணவர்கள் தினமும் 90 நிமிடம் ஒதுக்கவேண்டும் அரசு புதிய உத்தரவு

கிம் ஜாங் அன்னின் சகோதரி, கிம் யோஜாங் ‘சிறப்பான கல்வி’ என்கிற பெயரில் இந்த புதிய உத்தரவை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Update: 2020-09-17 23:00 GMT
பியாங்யாங்,

வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னின் மகத்துவம் பற்றி அறிய அந்த நாட்டின் தொடக்கப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் ஒரு நாளைக்கு 90 நிமிடங்கள் வரை ஒதுக்க வேண்டும் என்று வடகொரிய அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கிம் ஜாங் அன்னின் சகோதரி, கிம் யோஜாங் ‘சிறப்பான கல்வி’ என்கிற பெயரில் இந்த புதிய உத்தரவை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.அதில், “வட கொரியாவின் தலைமைக்கு விசுவாசத்தையும், நம்பிக்கையையும் வளர்ப்பதை நோக்கமாக கொண்டுள்ளது” என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய உத்தரவு ஆகஸ்டு 25-ந் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது என்றும் இதற்கு முன்னதாக, தொடக்க பள்ளி குழந்தைகள் கிம் ஜாங் அன் பற்றிய 30 நிமிட வகுப்பில் மட்டுமே கலந்து கொள்ள வேண்டியிருந்தது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“கிம் ஜாங் அன் 5 வயதாக இருந்தபோது, அவர் ஒரு பிரகாசமான குழந்தையாக இருந்தார், அவர் ஒரு படகு சவாரி செய்தார், இலக்கு பயிற்சி செய்தார், படிக்க விரும்பினார்” என்று புதிய பாடத்திட்டம் தொடக்க பள்ளி மாணவர்களுக்கு பயிற்றுவிக்கிறது என கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்