டிஸ்னி நிறுவனத்தில் 28 ஆயிரம் ஊழியர்கள் திடீர் பணிநீக்கம்

பொழுதுபோக்கு துறையின் ஜாம்பவனான டிஸ்னி நிறுவனம், அதன் 28,000 பணியாளர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது.

Update: 2020-10-01 02:11 GMT
வாஷிங்டன்

கொரோனா பரவல் காரணமாக அமெரிக்காவில் செயல்பட்டு வரும் டிஸ்னி பொழுதுபோக்கு பூங்காக்கள் முழுமையாக முடங்கிப்போயுள்ளன.இதனால் அந்நிறுவனம் கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் டிஸ்னி நிறுவனத்தின் பொழுதுபோக்கு பூங்கா பிரிவு தலைவரான ஜாஷ் டி அமாரோ வெளியிட்டுள்ள அறிவிப்பில், கனத்த இதயத்துடன் தொழிலாளர்களின் பணிநீக்க அறிவிப்பை வெளியிடுவதாக குறிப்பிட்டார்.

இதனால் அமெரிக்கா டிஸ்னி பூங்காக்களில் பணியாற்றி வந்த 28,000 பேர் வேலை இழக்கும் சூழல் உருவாகியுள்ளது.

மேலும் செய்திகள்