செல்ல பிராணி 11 அடி மலைப்பாம்புடன் நீச்சல் குளத்தில் நீந்தும் 8 வயது சிறுமி!

இஸ்ரேலில் செல்லப்பிராணி மலைப்பாம்புடன் (11 அடி) 8 வயது சிறுமி நீச்சல் குளத்தில் நீந்தும் வீடியோ சமூகவளைதளங்களில் வைரலாகியது.

Update: 2020-10-09 18:14 GMT
பொதுவாக பாம்பு என்றால் படையே நடுங்கும் என்பார்கள். அதற்கு முக்கிய காரணம் பாம்பின் விஷம் தான். இந்தநிலையில், இஸ்ரேல் நாட்டை சேர்ந்த 8 வயது சிறுமி 11 அடி நீளம் கொண்ட மலைப்பாம்புடன் நீச்சல் குளத்தில் நீந்துவது தற்போது வைரலாகி உள்ளது.

8 வயது சிறுமியான இன்பார், தனது பெற்றோருடன் தெற்கு இஸ்ரேலில் உள்ள விலங்குகள் சரணாலயத்தில்  பெற்றோருடன் வசித்து வருகிறார். பெல்லி என்ற 11 அடி நீளமுள்ள மலைப்பாம்பு சிறுமியின் செல்லப்பிராணியாம்.

கொரோனா காரணமாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் பெல்லி என்ற மலைப்பாம்புடன் 8 வயது சிறுமி அதிகநேரத்தை செலவிட்டு வருவதாக அவரது பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

சிறுமி இது குறித்து கூறுகையில், நான் பாம்பை மிகவும் நேசிக்கிறேன். இது எனது நேரத்தை செலவழிக்க மிகவும் உதவுகிறது. சில சமயங்களில் நான் பாம்புகளை (அவற்றின் தோலை) உரிக்க உதவுகிறேன், மேலும் கொரோனா வைரஸின் போது அவர்கள் மகிழ்ச்சியாக இருக்க உதவுகிறேன் என்றார்.

இன்பார், இந்த எல்லா விலங்குகளுடனும் சேர்த்து ஒன்றாக வளர்க்கப்பட்டார். அவள் பாம்புகளுடன் வளர்க்கப்பட்டாள். இன்பார் குழந்தையாக இருக்கும்போதே அவள் பாம்புடன் நீச்சல் குளத்தில் நீந்தினாள், இப்போது அவள் வளர்ந்துவிட்டார், பாம்பும் பெரிதாகிவிட்டது, அதனால் அவர்கள் ஒன்றாக குளத்தில் நீந்துகிறார்கள். இது எங்களுக்கு மிகவும் இயல்பானதாகவே தோன்றுகிறது என்று இன்பாரின் தாய் சரித் ரெகேவ் கூறினார்.

மேலும் செய்திகள்