ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில் கொரோனா நோய்த்தொற்றை குறைக்க அவசரகால நிலை பிரகடனம்

ஸ்பெயின் தலைநகரில் கொரோனா நோய்த்தொற்று வீதங்களைக் குறைக்க ஸ்பெயின் அரசாங்கம் 15 நாள் அவசரகால நிலைக்கு உத்தரவிட்டுள்ளது.

Update: 2020-10-10 00:56 GMT
மாட்ரிட்

ஸ்பெயின் தலைநகரில் கொரோனா நோய்த்தொற்று வீதங்களைக் குறைக்க ஸ்பெயின் அரசாங்கம் 15 நாள் அவசரகால நிலைக்கு உத்தரவிட்டுள்ளது.

ஒரு வாரத்திற்கு முன்பு விதிக்கப்பட்ட ஊரங்க நீதிமன்றம் ரத்து செய்ததையடுத்து ஸ்பெயின் அரசாங்கம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.

மாட்ரிட் மற்றும் அருகிலுள்ள ஒன்பது நகரங்கள் மக்கள் நடமாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும். சோசலிச அரசாங்கத்தின் கோரிக்கைகளுக்கு மத்திய-வலது நகர அதிகாரிகள் சவால் விடுத்துள்ளதால் தலைநகர் மாட்ரிட் அரசியல் பிரச்சினையின் மையப்பகுதியாக உள்ளது.

தலைநகர் மாட்ரிட்டில் கொரோனா வழக்குகள் குறைந்துவிட்டன, அவசரகால நிலை நியாயமற்றது என நகர அதிகாரிகள் கூறுகிறார்கள்.ஏற்கனவே நடைமுறையில் உள்ள நடவடிக்கைகள் செயல்படுவதாகவும், தேசிய அரசாங்க உத்தரவு மாட்ரிட் மக்களால் புரிந்து கொள் முடியாத ஒரு நடவடிக்கை என்று மாட்ரிட் சுகாதார அமைச்சர் என்ரிக் ரூயிஸ் எஸ்குடெரோ வலியுறுத்தினார்.

மேலும் செய்திகள்