அதிகரிக்கும் பதற்றம்: தைவான் ஜலசந்தி வழியே சென்ற அமெரிக்க போர்க்கப்பல் சீனா கடும் எச்சரிக்கை

அமெரிக்காவின் போர்க்கப்பல் ஒன்று தைவான் ஜலசந்தி வழியே பயணித்ததையடுத்து சீனா அமெரிக்காவின் நடவடிக்கையை கடுமையாக எச்சரித்துள்ளது.

Update: 2020-10-15 10:22 GMT
பீஜிங்

சமீபத்தில் சீனாவுக்கும், தைவானுக்கும் இடையே ஏற்பட்டு வரும் சிறு சிறு மோதல்கள் அதிகரித்து வரக்கூடிய நிலையில், அமெரிக்காவின் போர்க்கப்பல் ஒன்று தைவான் ஜலசந்தி வழியே பயணித்ததையடுத்து சீனா அமெரிக்காவின் நடவடிக்கையை கடுமையாக எச்சரித்துள்ளது. 

உலகின் மிகப் பெரும் பொருளாதார பலமிக்க நாடுகளான சீனா, அமெரிக்காவுக்கு இடையே மோதல்கள் கூர்மையடைந்து வருகின்றன. அமெரிக்கா கடற்படையின் இந்த நடவடிக்கைக்கு பின்னர், சீன கடற்படையின் கிழக்கு பிராந்தியத்தின் தளபதியான சுன்ஹுய், சீன இராணுவம் அமெரிக்க கடற்படையின் போர்க்கப்பலின் நடவடிக்கையை கண்காணித்து வருவதாக தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். அமெரிக்க கடற்படையின் இந்த நடவடிக்கையை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அமெரிக்கா, தைவான் மக்களுக்கு தவறான தகவல்களை அனுப்பி வருவதாகவும் சுன்ஹுய் தெரிவித்துள்ளார். மேலும்,தன்னாட்சி அமைப்பை கொண்டுள்ள பிராந்தியத்தின் மிகவும் துடிப்பான ஜனநாயக நாடுகளில் ஒன்றான தைவானை சீனா அங்கீகரித்துள்ளது. 2016 ஆம் ஆண்டில் ஜனாதிபதி சாய் இங்-வென் தேர்ந்தெடுக்கப்பட்டது இதற்கு ஓர் உதாரணம் என்றும் கூறியுள்ளார்.

இதற்கிடையில், தைவான் ஜலசந்தி வழியாக மேற்கொள்ளப்பட்ட கப்பல் போக்குவரத்து ஒரு சுதந்திரமான மற்றும் இந்தோ-பசிபிக் மீதான அமெரிக்காவின் உறுதிப்பாட்டை நிரூபிக்கிறது என்று அமெரிக்க பசிபிக் கடற்படை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும், "அமெரிக்க கடற்படையானது, சர்வதேச சட்டம் அனுமதிக்கும் எங்கும் தொடர்ந்து பறக்கும், பயணிக்கும் மற்றும் செயல்படும்." என்றும் கூறியுள்ளது.

எம்கியூ9  டுரோன்கள் மற்றும் கடலோர தற்காப்பு ஏவுகணை அமைப்பு உள்ளிட்ட அதிநவீன இராணுவ உபகரணங்களை தைவானுக்கு விற்க விரும்புவதாக அமெரிக்கா கூறியுள்ளது. இதற்கு இசைவு தெரிவிக்கும் விதமாக தனது இராணுவத்தை நவீனமயமாக்கவும், சமச்சீரற்ற போருக்கான திறனை மேம்படுத்தவும் விரும்புகிறது என்று தைவான் முக்கிய தலைவரான சாய் இங்-வென் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கையை சீனா எதிர்த்துள்ள நிலையில், தைவான் நிலைமை சீராக உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு அமெரிக்க கடற்படைக் கப்பல் தைவான் ஜலசந்தி வழியாக பயணிக்க அனுப்பிய 10 வது கப்பல் இதுவாகும், ஆகஸ்ட் 31-ம் தேதி கடைசியாக இதுபோன்ற கப்பல் ஜலசந்தி வழியே பயணித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்