பிரான்சு நாட்டில் ஆசிரியர் கொல்லப்பட்ட சம்பவம்: 9 பேர் கைது

பிரான்சில் வரலாற்று ஆசிரியர் தலை துண்டித்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2020-10-17 16:36 GMT
பாரிஸ்,

பிரான்சில் வரலாற்று ஆசிரியர் தலை துண்டித்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டனர். 

பிரான்சு நாட்டின் பாரிஸ் புறநகர் பகுதியான கன்பன்ஸ்-செயிண்டி-ஹனோரில் உள்ள பள்ளிக்கூடத்தில் வரலாற்று ஆசிரியராக பணியாற்றி வந்தவர் சாமுவேல் பெடி. இவர் கடந்த 5-ம் தேதி தனது வகுப்பில் நபிகள் நாயகத்தின் கேலிச்சித்திரங்களை மாணவர்களுக்கு காட்டி பாடம் எடுத்ததாகக் கூறப்படுகிறது.  

கருத்து சுதந்திரம் என்ற தலைப்பில் நடைபெற்ற வகுப்பில் மாணவர்களுக்கு ஆசிரியர் இந்த படங்களை காட்டியுள்ளதாக தெரிகிறது. ஆசிரியரின் செயலுக்கு மாணவர்கள் சிலரின் பெற்றோர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர். 

இந்த சூழலில்,  பள்ளிக்கூடம் அருகே நேற்று மாலை  சாமுவேல் பெடி நடந்து சென்ற போது, பின் தொடர்ந்து வந்த 18 வயது இளைஞன் கத்தியால், அவரது தலையை துண்டித்து கொலை செய்தான். இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கொலையாளியை பிடிக்க முயன்றனர்.

ஆனால்  தப்பிச்செல்ல முற்பட்டதால் அவனை போலீசார் சுட்டுக்கொன்றனர்.ஆசிரியர் கொல்லப்பட்ட இடத்தை பார்வையிட்ட பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான், இது பயங்கரவாத தாக்குதல்’ என்றார். இந்நிலையில், கொலை சம்பவத்தில் தொடர்புடையதாக 9 பேரை போலீசார் கைது செய்தனர். 

மேலும் செய்திகள்