உலக அளவில் கொரோனா பாதிப்பு 4 கோடியைக் கடந்துள்ளதாக ஜான்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகம் தகவல்

உலக அளவில் கொரோனா பாதிப்பு 4 கோடியைக் கடந்துள்ளதாக ஜான்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

Update: 2020-10-19 14:59 GMT
லண்டன்,

சீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. கொரோனா பாதிப்புக்கான தடுப்பு மருந்துகளைக் கண்டறியும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் உலக அளவில் கொரோனா பாதிப்பு 4 கோடியைக் கடந்துள்ளதாக அமெரிக்காவை மையமாகக் கொண்டு செயல்படும் ஜான்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஜான்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4 கோடியைக் கடந்துள்ளது. இதில் பலர் கொரோனா தொற்றுக்கான அறிகுறிகள் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். 11 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கொரோனாவுக்குப் பலியாகி உள்ளனர். 3 கோடிக்கும் அதிகமானவர்கள் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பில் தொடர்ந்து முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும், நான்காவது இடத்தில் ரஷ்யாவும் உள்ளன. 

மேலும் செய்திகள்