பிரான்சில் தொடர்ந்து உயர்வு; 10 லட்சம் கடந்தது கொரோனா பாதிப்பு

பிரான்சில் தொடர்ந்து உயர்ந்து வரும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 லட்சம் கடந்துள்ளது.

Update: 2020-10-23 23:59 GMT
பாரீஸ்,

பிரான்ஸ் நாட்டில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரசின் பாதிப்புகள் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.  நாளொன்றுக்கு 40 ஆயிரத்திற்கு மேல் புதிய பதிவுகள் ஏற்படுகின்றன.  இதனால் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை நேற்று முன்தினம் வரை 9,99,043 ஆக உயர்ந்து இருந்தது.

இதேபோன்று மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 34,210 ஆக உயர்ந்து இருந்தது.  வரும் வாரங்களில் நாட்டில் தொற்று நிலை கடினமடைய கூடும் என அந்நாட்டின் பிரதமர் ஜீன் கேஸ்டெக்ஸ் எச்சரிக்கை விடுத்ததுடன், சூழ்நிலை மோசமடைந்து விட்டால் நாட்டில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில், நேற்று 42,032 பேருக்கு புதிய பாதிப்புகள் உறுதிப்படுத்தப்பட்டன.  இதனால் பிரான்சில் மொத்த எண்ணிக்கை 10 லட்சம் என்ற அளவை கடந்துள்ளது.  இதனை அந்நாட்டு சுகாதார சேவை துறை தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்