மாலத்தீவில் விரைவில் அமெரிக்க தூதரகம்

மாலத்தீவு தலைநகா் மாலியில் அமெரிக்கத் தூதரகம் அமைக்க முடிவு செய்துள்ளோம்.

Update: 2020-10-29 00:13 GMT
மாலி,

மாலத்தீவில் தூதரகம் அமைக்கவிருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அந்த நாட்டில்  சுற்றுப் பயணம் மேற்கொண்ட அமெரிக்க வெளியுறவுத் துறை மந்திரி  மைக்கேல் பாம்போயோ இதுகுறித்து கூறியதாவது:

மாலத்தீவு தலைநகா் மாலியில் அமெரிக்கத் தூதரகம் அமைக்க முடிவு செய்துள்ளோம். இரு நாடுகளுக்கும் இடையிலான தூதரக உறவு 1966-ஆம் ஆண்டு தொடங்கியது. அன்றிலிருந்து ஜனநாயக அமைப்புகளை மாலத்தீவு மேம்படுத்தி வருகிறது.

அங்கு தூதரகம் அமைத்து, மண்டல பாதுகாப்புப் பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதில் ஒருங்கிணைந்து செயல்படுவோம் என்றார். மேலும் 

தற்போது மாலத்தீவுக்கான தூதரக சேவைகள் இலங்கை தலைநகா் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்