துருக்கியை உலுக்கிய நிலநடுக்கம்- 4 பேர் பலி, 120- பேர் காயம்

துருக்கி மற்றும் கிரீஸ் நாடுகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து விழுந்து கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2020-10-30 16:03 GMT

இஸ்தான்புல்,

துருக்கியில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள கட்டிடங்கள் குலுங்கின.  இந்த நிலநடுக்கம் கிரீஸ் தீவுகள், துருக்கி, பல்கேரியா, வடக்கு மசடோனியா ஆகிய நாடுகளில் உணரப்பட்டது. இதில் அதிகபட்சமாக துருக்கியின் இஷ்மிர் மாகாணத்தில் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவானது.

திடீரென ஏற்பட்ட இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் துருக்கியின் இஸ்மிர்,மார்மரா  ஆகிய பகுதியிலும் கிரீஸின் சமோஸ் பகுதியிலும் கட்டிடங்கள் இடிந்து பலத்த சேதமடைந்தன, இதனால் ஏராளமான மக்கள் வீதிளில் தஞ்சம் புகுந்தனர். அதோடு அதனை ஒட்டியுள்ள கடற்கரை பகுதிகளில் சிறிய அளவிலான சுனாமியும் ஏற்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்திகள்  வெளியிட்டுள்ளன. 

நிலநடுக்கத்தில் சிக்கி இஷ்மிர் மாகாணத்தில் 4 பேர் உயிரிழந்ததாகவும் 120-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. மேலும் கீரிஸ் மற்றும் துருக்கியில் இதர பகுதிகளில் பாதிப்பு அதிகம் இருக்கலாம் என கருதப்படுகிறது. 

மேலும் செய்திகள்