கொரோனா சிகிச்சைக்கு ஆஸ்பிரின் மருந்து; ஆய்வு மேற்கொள்ள பிரிட்டன் முடிவு

கொரோனா சிகிச்சைக்கு ஆஸ்பிரின் வலி நிவாரணி மருந்து பொருட்களை பயன்படுத்துவதற்கான பரிசோதனைகளை மேற்கொள்ள பிரிட்டன் முடிவு செய்துள்ளது.

Update: 2020-11-06 13:21 GMT
லண்டன்,

கொரோனா பாதிப்புகளில் இருந்து மக்களை காப்பதற்கான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளும் செயல்பட்டு வருகின்றன.  இவற்றில் பிரிட்டனும் ஒன்று.

அந்நாட்டு ஆராய்ச்சியாளர்கள் பரிசோதனை முயற்சியாக, ஆஸ்பிரின் என்ற வலி நிவாரணியாக பயன்படுத்தப்படும் மருந்துகளை கொரோனா பாதிப்பு சிகிச்சைக்கு பயன்படுத்துவது பற்றி ஆய்வு மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர்.

ஆஸ்பிரின் மருந்துகள், ஒருவரது ரத்தம் கெட்டிப்படுவதில் இருந்து விடுவித்து ரத்தம் மென்மையாக மாறுவதற்கான பணியை மேற்கொள்கிறது.  கொரோனா பாதிப்புகளுக்கு ஆளாகும் நபர்களுக்கு இரத்த அடைப்பு ஏற்பட கூடிய ஆபத்து உள்ளது.  அதனால், அவர்களது உடலில் ரத்தம் முடிச்சுகளாக சேருவதில் இருந்து விடுவிக்கும் பணியை மேற்கொள்ள இந்த மருந்துகளை பயன்படுத்தலாம் என கண்டறிந்துள்ளனர்.

இதுபற்றி பரிசோதனை ஆய்வாளர்களில் துணை தலைவராக உள்ள பீட்டர் ஹார்பி என்பவர் கூறும்பொழுது, இந்த மருந்து (ஆஸ்பிரின்) பலன் அளிக்கும் என நம்புவதில் தெளிவான நிலை காணப்படுகிறது.  இது பாதுகாப்பு நிறைந்தது.  விலையும் அதிகமில்லை.  எளிதில் கிடைக்க கூடியது என கூறுகிறார்.

இதனை தொடர்ந்து, பரிசோதனை முயற்சியாக நாள் ஒன்றுக்கு 150 மி.கிராம் ஆஸ்பிரினை குறைந்தது 2 ஆயிரம் நோயாளிகளுக்கு வழங்கி சோதனை செய்ய உள்ளனர்.  அவர்களிடம் பெறப்படும் தரவுகளை கொண்டு, பிற முறைகளில் கொரோனா பாதிப்புகளுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகளுடன் ஒப்பிட்டு பார்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.  எனினும் அதிகப்படியான அளவில் இந்த மருந்துகளை எடுத்து கொள்வது உடல் நலனுக்கு ஆபத்து என்றும் கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்