‘கொரோனா வைரஸ் பிறழ்வு தடுப்பூசியையும் பாதிக்கும்’ - ஆய்வில் அதிர்ச்சி தகவல்

கொரோனா வைரஸ் பிறழ்வு தடுப்பூசியையும் பாதிக்கும் என்ற அதிர்ச்சி தகவல் ஆய்வில் தெரியவந்துள்ளது.;

Update:2020-11-14 05:00 IST
வாஷிங்டன், 

கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசியை தயாரிக்கும், பரிசோதிக்கும் நடவடிக்கைகள் ஒருபுறம் இருந்தாலும், அந்த வைரசின் தற்போதைய நிலை குறித்தும் பல்வேறு ஆய்வுகள் நடந்து வருகின்றன.  அந்தவகையில் வைரசின் பிறழ்வு நிலை மற்றும் அதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அமெரிக்காவின் விஸ்கான்சின் பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

இதில் கொரோனா வைரசின் பொதுவான பிறழ்வு உலகம் முழுவதும் வேகமாக பரவுவதாக கண்டறியப்பட்டு உள்ளது. குறிப்பாக ‘டி614ஜி’ என்ற கொரோனாவின் திரிபு, சீனாவின் உகானில் தோன்றிய வைரசை விட 10 மடங்கு அதிகமாக பரவுவதாகவும், சுவாசப்பாதையில் இது பெரும் இடையூறு ஏற்படுத்துவதால் மனிதர்களிடையே வேகமாக பரவும் வாய்ப்பு இருப்பதாகவும் கண்டறியப்பட்டு உள்ளது. 

விலங்குகளிடம் இந்த வைரஸ் திரிபை செலுத்தி சோதித்த போது, கடுமையான நோய்களுடன் தொடர்புபடுத்தப்படவில்லை. அதேபோல தடுப்பூசிகள் போன்ற எதிர்ப்பு மருந்துகளில் இந்த திரிபு சற்று அதிகம் பாதிப்பு ஏற்படுத்துவதும் கண்டறியப்பட்டது. இதனால் இந்த திரிபை கட்டுப்படுத்து தடுப்பூசிகள் பயன்தராது என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் கொரோனா வைரசின் பிறழ்வு நிலை உலக அளவில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்