கொரோனா ஆபத்துக்கு மத்தியில் ஊழியர்களை அலுவலகம் வருமாறு கட்டாயப்படுத்தியதா ‘பேஸ்புக்’?

கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவும் ஆபத்துக்கு மத்தியிலும், உலகம் எங்கும் 200 ஊழியர்களை அலுவலகங்களுக்கு பணிக்கு வருமாறு கட்டாயப்படுத்தியதாக ‘பேஸ்புக்’ சமூக வலைத்தள நிறுவனம் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Update: 2020-11-19 20:34 GMT
சாக்ரமெண்டோ, 

கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவும் ஆபத்துக்கு மத்தியிலும், உலகம் எங்கும் 200 ஊழியர்களை அலுவலகங்களுக்கு பணிக்கு வருமாறு கட்டாயப்படுத்தியதாக ‘பேஸ்புக்’ சமூக வலைத்தள நிறுவனம் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிறுவனம் தனது லாபங்களை தக்க வைப்பதற்காக தேவையில்லாத ஆபத்தை ஏற்படுத்தி உள்ளதாக ஒரு திறந்த கடிதத்தில் ஊழியர்கள் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இன்னும் தொலைவிடங்களில் இருந்து கொண்டு வேலை செய்ய ஏற்ற வகையில் ‘பேஸ்புக்’ நிறுவனம் மாற்றங்களை செய்யவும், ஆபத்து அலவன்சு உள்ளிட்ட பிற சலுகைகளை வழங்கவும் அந்த ஊழியர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

லாபத்துக்காக எங்கள் ஆரோக்கியத்தையும்,, பாதுகாப்பையும் தியாகம் செய்வது ஒழுக்கக்கேடானது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் பெரும்பாலான ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை செய்கிறார்கள் என்று ‘பேஸ்புக்’ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுபற்றி அந்த நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறும்போது, “வெளிப்படையான உள்மட்டத்திலான பேச்சுவார்த்தைகளில் நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம். இந்த விவாதங்கள் நேர்மையாக இருக்க வேண்டும். 15 ஆயிரம் உள்ளடக்க மதிப்பாய்வாளர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் வீடுகளில் இருந்தே பணி செய்கிறார்கள். இந்த பெருந்தொற்று காலத்தில் அவர்கள் அதை தொடர்வார்கள்” என தெரிவித்தார்.

மேலும் செய்திகள்