ஜோ பைடன் பதவியேற்பதற்கு முன் அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு இரட்டிப்பாகும்- ஆய்வில் அதிர்ச்சி தகவல்

ஜோ பைடன் பதவியேற்பதற்கு முன்பாக அமெரிக்காவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை இரட்டிப்பாகும் என ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது.

Update: 2020-11-23 19:34 GMT
வாஷிங்டன், 

உலக அளவில் கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த சில வாரங்களாக அங்கு வைரஸ் பரவல் ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. தற்போது அங்கு 1 கோடியே 20 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில் அங்கு அண்மையில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். அவர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 20-ந்தேதி அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக பதவி ஏற்கிறார்.

இந்த நிலையில் ஜோ பைடன் பதவியேற்பதற்கு முன்பாக அமெரிக்காவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை இரட்டிப்பாகும் என ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில் “சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் உள்ளிட்ட கொரோனா கட்டுப்பாடுகளை கடைப்பிடிப்பதில் தற்போதுள்ள இதே நிலை நீடித்தால் அடுத்த ஆண்டு ஜனவரி இறுதிக்குள் அமெரிக்காவில் 2 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்படக்கூடும். மொத்த பாதிப்பில் 10 சதவீதம் மட்டுமே இதுவரை கண்டறியப்பட்டுள்ளதாக நாங்கள் கருதுகிறோம். எனவே கொரோனா பரிசோதனையை இன்னும் அதிகரிக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்