ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்; தளபதி உள்பட 10 வீரர்கள் படுகொலை

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான் பயங்கரவாத தாக்குதலில் எல்லை காவல் படை தளபதி உள்பட 10 வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.

Update: 2020-12-14 08:58 GMT
குந்தூஜ்,

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான் பயங்கரவாதிகளின் ஆதிக்கம் நீடித்து வருகிறது.  பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக்களின் மீது தொடர் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

உலகில் கடந்த 2019ம் ஆண்டில் நடந்த கடுமையான 20 பயங்கரவாத தாக்குதல்களில் 6 தாக்குதல்கள் அந்நாட்டில் நடந்துள்ளன என அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

ஆப்கானிஸ்தான் நாட்டின் குந்தூஜ் மாகாணத்தில் இமாம் சாஹிப் மாவட்டத்தில் தலீபான் பயங்கரவாதிகள் நேற்றிரவு திடீர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.  இதில், எல்லை காவல் படையை சேர்ந்த தளபதி ஒருவர் உள்பட 10 வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளனர்.  6 பேர் காயமடைந்து உள்ளனர்.  இதனை மாகாண கவுன்சில் உறுப்பினர் கலீல் குவாரிஜடா உறுதிப்படுத்தி உள்ளார்.

மேலும் செய்திகள்