51 ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருந்து வந்த மர்ம ஒலிகள் வேற்றுக்கிரக வாசிகள் அனுப்பியதா..? விஞ்ஞானிகள் ஆய்வு

51 ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருந்து வந்த ரேடியோ சமிக்ஞை ஒலிகள் வேற்றுக்கிரக வாசிகள் அனுப்பிய சப்தமா என விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்

Update: 2020-12-19 07:35 GMT
Image courtesy : Jack Madden/Cornell University
வாஷிங்டன்

இன்றுவரை, விஞ்ஞானிகள் பிரபஞ்சத்தை நன்கு புரிந்துகொள்வதற்கும், வேற்றுகிரக வாழ்க்கையின் அறிகுறிகளைக் கண்டுபிடிப்பதற்கும் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி நடத்தி வருகின்றனர். இந்த ஆய்வின் போது  4,500 க்கும் மேற்பட்ட வெளி கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இருந்தாலும், இந்த தொலைதூர கிரகங்களில் இருந்து வெளிவரும் ஒரு ரேடியோ  சமிக்ஞை ஒலிகளை அவர்கள் ஒருபோதும் கேட்டதில்லை.

வானியல் மற்றும் வானியிற்பியல் என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வின்படி, போய்ட்ஸ் விண்மீன் தொகுப்பில் தோன்றிய ரேடியோ சமிக்ஞை ஒலிகளை அவர்கள் கண்டுபிடித்ததாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

பிரபஞ்சத்தின் ஒரு புறத்திலிருந்து பெறப்பட்ட இந்த ரேடியோ சமிக்ஞை ஒலிகள் வேற்றுக்கிரக வாசிகள் அனுப்பிய சப்தமா என விஞ்ஞானிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்

அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் ஜேக் டர்னர், பிலிப் ஸர்க்கா மற்றும் ஜீன் மத்தியாஸ் ஆகியோர் வானியல் ரேடியோ சமிக்ஞை குறித்து ஆய்வு நடத்தி வருகின்றனர். அப்போது 51 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ள கிரகத்தில் இருந்து ரேடியோ சமிக்ஞை ஒலிகள் வருவதைக் கண்டறிந்தனர். விண்வெளியில் தூரத்தை அளவிடும் ஒரு ஒளி ஆண்டு என்பது சுமார் 6 டிரில்லியன் மைல்கள் ஆகும்.

இந்தச் சப்தம் தவ்பூடிஸ் என்ற நட்சத்திர அமைப்பில் இருந்து வெளியாகி இருக்கலாம் என்று அவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் அந்தப் சப்தம் வேற்றுக்கிரகவாசிகள் அனுப்பியவையா என்றும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஆஸ்திரேலியாவில் உள்ள பார்க்ஸ் தொலைநோக்கி மூலம் ரேடியோ அலைகளின் வரிசை கண்டறியப்பட்டது - 1977 ஆம் ஆண்டின் புகழ்பெற்ற 'வாவ்! சமிக்ஞை குறித்து  விரிவான பகுப்பாய்வு இருந்தபோதிலும், விஞ்ஞானிகள் சமிக்ஞை ஒலிகள் வந்த   இடத்தை இன்னும் அடையாளம்  காணவில்லை.

இருப்பினும், சமீபத்திய ஆய்வை பொறுத்தவரையில்  சமிக்ஞை ஒலிகள் 4.2 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள சிவப்பு குள்ள நட்சத்திரமான ப்ராக்ஸிமா செண்டாரியிலிருந்து வெளிவந்ததை கண்டறிந்தனர்.

இதுவரை 4,500 க்கும் மேற்பட்ட கிரகங்கள்  கண்டுபிடிக்கப்பட்டுள்ளன, ஒரு சிறிய பகுதி மட்டுமே உயிர் வாழ்க்கையை  கொண்டிருக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது என்று கருதப்படுகிறது.

நவம்பரில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், விண்மீன் திரள்( கேலக்சி)  உண்மையில் 300 மில்லியன் கிரகங்களைக் கொண்டிருக்கக்கூடும் என்று கூறி உள்ளது.

மேலும் செய்திகள்