ஆப்கானிஸ்தான் தலைநகரில் குண்டுவெடிப்பு - அரசு செய்தித் தொடர்பாளர் உள்பட 3 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் நடந்த குண்டுவெடிப்பில் அரசு செய்தித் தொடர்பாளர் உள்பட 3 பேர் உயிரிழந்தனர்.

Update: 2021-01-10 17:36 GMT
காபுல்,

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் இன்று காலை சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பில் ஆப்கானிஸ்தானின் தேசிய பொது பாதுகாப்பு தலைமை இயக்குநரக செய்தித் தொடர்பாளர் ஜியா வதான், அவரது பாதுகாவலர் மற்றும் டிரைவர் ஆகிய 3 பேர் உயிரிழந்துள்ளனர். செய்தித் தொடர்பாளர் ஜியா வதானுக்கு ஏற்கனவே மிரட்டல்கள் வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

இவர்கள் வந்த வாகனத்தை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. காபுல் நகரின் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த குண்டுவெடிப்பைத் தொடர்ந்து அப்பகுதிக்கு போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் விரைந்தனர். இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் இதுவரை பொறுப்பேற்கவில்லை. எனினும் தலிபான் அமைப்பு இந்த வெடிகுண்டு தாக்குதலை நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

மேலும் செய்திகள்